
பாகூர் : தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் 'சர்வதேச யோகா தினவிழா' கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, பள்ளி சேர்மன் டாக்டர் கிரண்குமார் தலைமை தாங்கினார். தாளாளர் எழிலரசி கிரண்குமார் வரவேற்றார். தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், பள்ளி வளாகத்தில் யோகாசனம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், சித்த மருத்துவர் சைஜா, சுகாதார உதவி ஆய்வாளர்கள் ஜவகர், இளஞ்செழியன், யோகா பயிற்சியாளர் உமா மகேஸ்வரி, மருத்துவ பணியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தவளக்குப்பம் அடுத்துள்ள புதுக்குப்பம் கடற்கரை மணல் பரப்பில் பள்ளியின் யோகா ஆசிரியர் வழிகாட்டுதலுடன், மாணவர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு யோகசனங்களை செய்து பயிற்சியில் ஈடுபட்டனர். தலைமையாசிரியர் உமா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.