நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஈஷா யோகா மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் எழில் கல்பனா தலைமை தாங்கினார். ஈஷா யோகா மையத்தின் ஆசிரியர் பூரணி, யோகா பயிற்றுநர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மாணவர்களுக்கு யோகா கலை பயிற்சியை வழங்கினர்.இதில் நுாற்றுாக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

