/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'நீட்' அல்லாத படிப்புகளுக்கு நாளை வரை விண்ணப்பிக்கலாம்
/
'நீட்' அல்லாத படிப்புகளுக்கு நாளை வரை விண்ணப்பிக்கலாம்
'நீட்' அல்லாத படிப்புகளுக்கு நாளை வரை விண்ணப்பிக்கலாம்
'நீட்' அல்லாத படிப்புகளுக்கு நாளை வரை விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 30, 2024 04:39 AM
புதுச்சேரி: சென்டாக் நீட் அல்லாத படிப்புகளுக்கு நாளை 31ம் தேதியுடன் முடிவடைகின்ற சூழ்நிலையில், இதுவரை 15,959 பேர் விண்ணப்பிக்க பதிவு செய்துள்ளனர்.
நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை அல்லாத படிப்புகளுக்கு www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தில் கடந்த 8ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
விண்ணப்பிக்க கடந்த 22ம் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டு இருந்தது. மாணவர்கள், பெற்றோர்களின் கோரிக்கை ஏற்று நாளை 31ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நேற்று வரை 15,959 பேர் ஆன் லைனில் விண்ணப்பிக்க இ-மெயில், மொபைல் எண் கொடுத்து பதிவு செய்திருந்தனர். இவர்களில் 12,759 பேர் மட்டுமே விண்ணப்பித்தினை சமர்பித்துள்ளனர். சான்றிதழ் உள்பட பல்வேறு காரணங்களால் 3,200 பேர் இன்னும் விண்ணப்பித்தினை முழுமையாக பூர்த்தி செய்து சமர்பிக்காமல் உள்ளனர்.
நீட் அல்லாத படிப்புகளுக்கு இன்றும் நாளையும் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாள் வரை காத்திருக்காமல் மாணவர்கள் இன்றே விண்ணப்பிப்பது நல்லது.
விண்ணப்ப கட்டணம்:
எஸ்.சி.,எஸ்.டி., மாற்றுதிறனாளி பிரிவு மாணவர்கள் நீட் மதிப்பெண் அல்லாத டிகிரி, டிப்ளமோ படிப்புக்களில் சேர 500 ரூபாய், கலை அறிவியல் வணிக படிப்பில் சேர 150 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
இதர பிரிவு மாணவர்கள் நீட் அல்லாத டிகிரி, டிப்ளமோ தொழில் படிப்பில் சேர 1,000 ரூபாய், கலை அறிவியல் படிப்பில் சேர 300 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
பிற மாநில மாணவர்கள் நீட் அல்லாத டிகிரி, டிப்ளமோ படிப்பில் விண்ணப்பிக்க 1,500, கலை அறிவியல், வணிக படிப்பில் விண்ணப்பிக்க 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.