/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டீ கடைக்காரரை தாக்கிய வாலிபர் கைது
/
டீ கடைக்காரரை தாக்கிய வாலிபர் கைது
ADDED : செப் 13, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: டீ கடைக்காரரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மடுகரை வாணியர் வீதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார், 40; மடுகரை மந்தைவெளியில் டீ கடை நடத்தி வருகிறார்.
இவர் கடையில் சகுந்தலா என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் கடைக்கு நேற்று முன்தினம் மதியம் வந்த பண்ருட்டி, முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த பார்த்திபன், 35, என்பவர் சகுந்தலாவிடம் தகராறில் ஈடுபட்டார்.
தட்டிக்கேட்ட வசந்தகுமாரை, பார்த்திபன் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து, தப்பி சென்றார்.
இதுகுறித்து வசந்தகுமார் மடுகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து பார்த்திபனை கைது செய்தனர்.

