ADDED : ஜூன் 23, 2026 06:01 PM
புதுச்சேரி: புதிய பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
உருளையன்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரதாபன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு புதிய பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். கடலுார் பஸ் நிறுத்தம் பிளாட்பாமில் சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அதில், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய 80 கிராம் கஞ்சா பொட்டலம் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர் திலாஸ்பேட்டை, வீமன் நகர், கருணா ஜோதி தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் ரஞ்சித்குமார், 20; என்பது தெரியவந்தது.
அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின், அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
