ADDED : ஜூன் 23, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: செல்லிப்பட்டில் விற்பனைக்காக வைத்திருந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். செல்லிப்பட்டு முருகன் கோவில் அருகேயுள்ள பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது.
போலீசார் அங்கு விரைந்து சென்று கடையை சோதனை செய்தனர். அதில், குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ரூ. 1050 மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக, கடையின் உரிமையாளர் செல்லிப்பட்டு, செல்வ முருகன் நகரை சேர்ந்த உமாபதி, 52; மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
