ADDED : ஜூலை 14, 2026 08:53 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்னர். அப்போது ஊசுட்டேரி சாலையில் பைக்கில் வந்த வாலிபரை மடக்கி சோதனை செய்தனர். அதில் அவர் கஞ்சா கொண்டு வந்தது தெரியவந்தது. அதையடுத்து அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் லாஸ்பேட் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்கேயன், 25; என்பதும், அவரிடம் இருந்த கஞ்சாவை இளைஞர்களுக்கு விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டார். அதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.பின் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
