தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓடும் ரயிலில் ஓவியப்போட்டி நாஜிம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

 ஓடும் ரயிலில் ஓவியப்போட்டி நாஜிம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

 ஓடும் ரயிலில் ஓவியப்போட்டி நாஜிம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


ADDED : ஜூலை 14, 2026 09:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 09:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்: புதுவை திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில், காரைக்கால் - பேரளம் - மயிலாடுதுறை புதிய ரயில் வழித்தடத்தில் இயக்கப்படும் பயணிகள் ரயிலில், மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடந்தது.

துாய்மை இந்தியா - 2047ல் வளர்ந்த பாரதம் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கத்தை மையமாக கொண்டு நடத்தப்பட்ட இந்த போட்டியை நாஜிம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

போட்டியில் 8ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்று ஓவியங்கள் வரைந்தனர். 4ம் வகுப்பு முதல், 7ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு படங்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

காரைக்காலில் புறப்பட்டு ரயில் மயிலாடுதுறை ரயில் நிலையத்தை அடையும் வரை போட்டிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பின்னர் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுவை திருவள்ளுவர் கலைக்கூடத்தின் துணைத் தலைவர் கோவிந்தராஜன், செயலாளர் சிவகுமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us