தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா விற்ற  வாலிபர் கைது

கஞ்சா விற்ற  வாலிபர் கைது

கஞ்சா விற்ற  வாலிபர் கைது


ADDED : ஜூலை 31, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உழவர்கரை பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் சப்இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, உழவர்கரை அரசு உயர்நிலைப் பள்ளி அருகில், வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நிற்பதாக தகவல் வந்தது.

அங்கு சென்ற போலீசார் அவரை பிடித்து, சோதனை செய்தனர். அதில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர் திருக்கோவிலுார் பகுதியை சேர்ந்த அப்பு, 30 என்பதும், அவர் இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு விற்க கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 300 கிராம் கஞ்சா, ஸ்கூட்டர், மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us