ADDED : மே 20, 2024 04:06 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம், வீராம் பட்டினம் செல்லும் சாலை பிரமன் சதுக்கம் அருகே வாலிபர் ஒருவர் அவ்வழியாக நடந்து செல்லும் பெண்களை கிண்டல் செய்து, பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுபற்றி அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார், அங்கு நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், தவளக்குப்பம் அடுத்த டி.என்.பாளையம் புதுநகரை சேர்ந்த வெற்றிமுருகன், 21; என தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
