தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ‘நீட்’ தேர்வு குளறுபடிகளை விளக்கி  இளைஞர் காங்., கலந்துரையாடல்

‘நீட்’ தேர்வு குளறுபடிகளை விளக்கி  இளைஞர் காங்., கலந்துரையாடல்

‘நீட்’ தேர்வு குளறுபடிகளை விளக்கி  இளைஞர் காங்., கலந்துரையாடல்


ADDED : ஜூலை 24, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நீட் குறுபடிகளை விளக்கி, இளைஞர் காங்., சார்பில் கலந்துரையாடல் நடந்தது.

உறுவையாறு புதுநகரில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாநில தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில், நீட் தேர்வில் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுகள், வினாத்தாள் கசிவுகள், தேசிய தேர்வு முகமை, சி.பி.எஸ்.இ., தேர்வு முறைகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து மாணவர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தினர்.

மாணவர்களின் கல்வி, எதிர்காலத்தை பாதிக்கும் இத்தகைய பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டது. அகில இந்திய காங்., இணை செயலாளர் பாலக் வெர்மா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில பொது செயலாளர்கள் தனுசு, திருமுருகன், ரகுபதி, செந்தில், ராஜா குமார் மற்றும் இளைஞர் காங்., மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us