ADDED : ஆக 10, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இளைஞர் காங்., துவக்க நாள் விழா, கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
இளைஞர் காங்., தலை வர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, இளைஞர் காங்., கொடியை ஏற்றி வைத்தார்.
இளைஞர் காங்., நிர்வாகிகள் 'தேச நலன் மற்றும் முன்னேற்றத்துக்கான உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
இதில், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., மாநில காங்., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், மாகே எம்.எல்.ஏ., ரமேஷ் பரமத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இளைஞர் காங்., துவக்க நாளை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாகே பகுதியில் இளைஞர் காங்., சார்பில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.