தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி


ADDED : ஜூன் 04, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடலுார்: வடலுார் அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் இறந்தார்.

வடலுார் அடுத்த சேராக்குப்பம் ரயில்வே கிராசிங் அருகே ரயிலில் அடிபட்ட நிலையில், வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த கடலுார் முதுநகர் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., மோகன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். அப்போது, இறந்து கிடந்தவர் வடலுார், கோட்டக்கரை, மாருதி நகரை சேர்ந்த அசோக்குமார் மகன் அருண்குமார், 35, என தெரிந்தது. இவர், சென்னை, ஊரப்பாக்கத்தில் கார் சர்வீஸ் சென்டர் நடத்தி வந்ததும், விடுமுறைக்காக, தனது குழந்தைகளுடன் வடலுாரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் தெரியவந்தது.

அருண்குமார் ரயில் தண்டவாளத்தை கடந்த போது, திருச்சி – கடலுார் ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us