தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : ஜூன் 02, 2026 11:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2026 11:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வாலிபர் தற்கொலை செய்து கொண்டது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

உழவர்கரை, வின்சென்ட் வீதியை சேர்ந்தவர், பெர்னாட் மகன் கெவின், 23; இவரது மொபைல்போன் கடந்த மாதம் உடைந்து விட்டது. அவர் தனது தாயாரின் மொபைல்போனை பயன்படுத்தி வந்ததால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால் கெவின் மனஉளைச்சலில் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அறைக்குள் சென்றவர் நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது, அவர் அறையில் உள்ள பேனில் துக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அதிர்ச்சியடைந்தவர்கள், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us