/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மண்டல அளவிலான சாப்ட் பால் போட்டி: புதுச்சேரி வீரர்கள் சாதனை
/
மண்டல அளவிலான சாப்ட் பால் போட்டி: புதுச்சேரி வீரர்கள் சாதனை
மண்டல அளவிலான சாப்ட் பால் போட்டி: புதுச்சேரி வீரர்கள் சாதனை
மண்டல அளவிலான சாப்ட் பால் போட்டி: புதுச்சேரி வீரர்கள் சாதனை
ADDED : ஏப் 16, 2024 06:21 AM

புதுச்சேரி, : அகில இந்திய அளவில் மண்டலங்களுக்கு இடையிலான சாப்ட் பால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், மற்றும் மேற்கு மண்டலம் ஆகிய மண்டலங்களுக்குஇடையிலான சாப்ட்பால் போட்டிகள்ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக கடந்த 13மற்றும் 14ம் தேதி சேலத்தில் நடந்தது.
இறுதிபோட்டிக்கு ஆண்கள் பிரிவில் தெற்கு மண்டல அணி-வடக்கு மண்டல அணியும், பெண்கள் பிரிவில் தெற்கு மண்டலஅணி-மேற்கு மண்டல அணியும் தகுதி பெற்றன.
ஆண்கள் பிரிவில் தெற்கு மண்டல அணி, வடக்கு மண்டல அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. பெண்கள் பிரிவிலும் தெற்கு மண்டல அணி,மேற்கு மண்டல அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
ஆண்கள் தெற்கு மண்டலஅணியில் புதுச்சேரி சாப்ட் பால் சங்க வீரரும், இந்தியசாப்ட் பால் அணியில் விளையாடிய வீரருமான சதீஷ்குமார் மற்றும் புதுச்சேரி சாப்ட் பால் சங்க நேஷனல் விளையாட்டு வீரர் ஆதேஷ் ஆகியோர்கள் சிறப்பாக விளையாடி தெற்கு மண்டல அணி வெற்றி பெற்றது.
அதேபோல், பெண்கள் தெற்கு மண்டல அணியில் புதுச்சேரிசாப்ட் பால் சங்க வீராங்கனையும்,இந்திய சாப்ட்பால் அணியில் விளையாடிய வீராங்கனையுமானசுபிக்க்ஷா அருள் மற்றும் புதுச்சேரி சாப்ட்பால் நேஷனல்வீராங்கனையான சர்மிதா ஆகியோரும் சிறப்பாக விளையாடி தெற்கு மண்டல அணி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
புதுச்சேரி சாப்ட்பால் சங்கத்தை சார்ந்த நான்கு விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு புதுச்சேரி சாப்ட்பால் சங்க செயலாளர் அன்புசிவம், பொருளாளர் மன்னார்சாமி மற்றும் செயற்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

