தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏனாமில் ரூ. 24 ஆயிரத்திற்கு ஏலம் போன 1.3 கிலோ ‘புலசா மீன்’

ஏனாமில் ரூ. 24 ஆயிரத்திற்கு ஏலம் போன 1.3 கிலோ ‘புலசா மீன்’

ஏனாமில் ரூ. 24 ஆயிரத்திற்கு ஏலம் போன 1.3 கிலோ ‘புலசா மீன்’


ADDED : ஆக 28, 2026 07:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 07:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஏனாம் ராஜிவ் கடற்கரையில் 1.3. கிலோ புலசா மீன் 24 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையானது. 

வங்கக்கடலில் இருந்து இனப் பெருக்கத்திற்காக கோதாவரி நதியின் நன்னீரை நோக்கி எதிர் நீச்சலடித்து வரும் இல்சா ரக மீன்களே, நதி நீரில் நீந்தும் போது அதன் சுவை மாறுபட்டு புலசா என்று அழைக்கப்படுகின்றன.

ஆண்டிற்கு சில மாதங்கள் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த மீனின் தனித்துவமான சுவை காரணமாக, கோதாவரி மாவட்டங்கள் மற்றும் ஏனாம் பகுதியில் தாலியை விற்றாவது புலசா மீன் சாப்பிட வேண்டும் என்று மக்கள் இதனைப் போட்டிபோட்டு வாங்கிச் செல்வதாக கூறுவார்கள்.

இந்நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட ஏனாம் பிராந்தியத்தில், மீன் பிரியர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ‘புலசா மீன்’ பருவக்காலம் தற்போது துவங்கியுள்ளது. ராஜிவ் கடற்கரையில் நேற்று மீன்கள் ஏலம் நடைபெற்றது.

அந்த ஏலத்திற்கு வந்த 1.3 கிலோ எடையுள்ள புலசா மீனை ஏலம் எடுக்க வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவியது. விடாப்பிடியாக தொடர்ந்து ஏலம் கேட்டு வந்த  நாட்டி பார்வதி என்ற வியாபாரி இறுதியாக அந்த மீனை 24 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். நடப்பு பருவத்தில், ஒரு புலசா மீன் 24 ஆயிரம் ரூபாய்க்கு  ஏலம் போனது இதுவே முதல்முறை என்பதால், இது அப்பகுதியில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us