ADDED : ஆக 28, 2026 08:01 PM
புதுச்சேரி: பா.ஜ., சார்பில், சேவை உறுதிமொழி இயக்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுச்சேரி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். பிரதமர் மோடியின் 25 ஆண்டு மக்கள் சேவையை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் “சேவை உறுதிமொழி இயக்கம்” தொடர்பான கூட்டம் நடந்தது.
வரும் 17ம் தேதி முதல் அக்டோபர் 17ம் தேதி வரை நாடு முழுதும் இந்த இயக்கத்தை சிறப்பாக நடத்த தேசிய தலைமை அறிவுறுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தேசிய பொறுப்பாளரும், ஆந்திரப் பிரதேச சுகாதாரத்துறை அமைச்சருமான சத்திய குமார் யாதவ் இந்த இயக்கத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
மாநிலம், மாவட்டம் மற்றும் தொகுதி அளவில் சிறப்பாக செயல்படுத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில், அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் சபாநாயகர் செல்வம், மாநில பொதுச் செயலாளர்கள் மோகன் குமார், லட்சுமி நாராயணன், தமிழக மாநில செயலாளர் வினோத் செல்வம் பங்கேற்றனர்.
மாநில குழுவில் விவசாயத்துறை அமைச்சர் ராஜசேகரன், முன்னாள் எம்.எம்.ஏ., பாஸ்கர், மாநில செயலாளர் தமிழ்மாறன், மகளிர் அணி தலைவர் தாமரைச்செல்வி, மாநில இளைஞர் அணி தலைவர் ஆடலரசன் ஆகியோர் மாநிலப் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
