/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
139 மோசடி வங்கி கணக்குகள் முடக்கம்
/
139 மோசடி வங்கி கணக்குகள் முடக்கம்
ADDED : பிப் 20, 2025 06:15 AM
சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா தகவல்
புதுச்சேரி: புதுச்சேரியில் மோசடி பணம் பெறுவதிற்காக உருவாக்கப்பட்டு இருந்த 139 மோசடி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா கூறினார்.
அவர் கூறியதாவது;
புதுச்சேரியில் பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறி 11 பேரிடம் ரூ. 10 கோடி மோசடி செய்த நபரின் கூட்டாளிகள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது.
சைபர் கிரைம் குற்றவாளிகள் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்தை கூறி இதுபோன்ற மோசடியில் ஈடுப்படுகின்றனர். யாராலும் பணத்தை இரட்டிப்பாக்கி தர முடியாது. பொதுமக்கள் யாரேனும் ஆன்லைனில் முதலீடு செய்வதிற்கு முன்பு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்தவித முன் அறிவிப்பு இன்றி ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம்.
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடியில் பெறும் பணத்தை செலுத்த 139 மோசடியான வங்கி கணக்குகள் உள்ளதாக, மத்திய அரசு தகவல் கொடுத்தது. அதன்படி, புதுச்சேரியில் உள்ள வங்கிகளுக்கு சென்று அந்த வங்கி கணக்குகள் முடக்கி உள்ளோம்.
இந்த மோசடி வழக்கில் சிறப்பாக செயல்பட்ட எஸ்.பி., பாஸ்கரன் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தியாகராஜன், தலைமை காவலர் மணிமொழி, கான்ஸ்டபிள் வைத்தியநாதன் தலைமையிலான குழுவுக்கு எனது பாராட்டுகள்' என்றார்.

