ADDED : நவ 25, 2026 07:47 PM
புதுச்சேரி: மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று (நவ.,24) ரோந்து சென்றபோது, கிரேவ் யார்டு பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த மேட்டுப்பாளையம் அங்கப்பன்,37; என்பவரை கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று மூலகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளை செய்த ரெட்டியார்பாளையம் ஜோதிமணி,27; முருகன்,25, ஆகியோரை கைது செய்தனர்.
முத்தியால்பேட்டை போலீசார் நேற்று கணேஷ் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். பாப்பாள் கோவில் பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த முத்தியால்பேட்டை, ராமமூர்த்தி 37, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
காலாப்பட்டு போலீசார் நேற்று கனகசெட்டிக்குளம் கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளை செய்த திண்டிவனம், பாலாஜி,36, என்பவரை கைது செய்தனர்.
ஒதியஞ்சாலை போலீசார் நேற்று மோந்திரேசியே வீதியில் ரோந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளை செய்த திப்ராயப்பேட்டை பென் ஆண்டனி 25; அஸ்வின்,24; ஆகியோரை கைது செய்தனர்.
மங்கலம் போலீசார் நேற்று உறுவையாறு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பொது இடத்தில் மது அருந்திய உறுவையாறு அய்யப்பன்,55; என்பவரை கைது செய்தனர்.
மாகே போலீசார் நேற்று முன்தினம் லா பார்மா சாலையில் ரோந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளை செய்த கோழிக்கோடு ஆதர்ஷ், 26, என்பவரை கைது செய்தனர்.
பள்ளூர் போலீசார் நேற்று முன்தினம் பம்பரமுக்கு பகுதியில் ரோந்து சென்றனர். கொம்பரமுக்கு பார் அருகில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட கோழிக்கோடு அஜேஷ்,39; என்பவரை கைது செய்தனர்.
