தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பசு மாடு வழங்கியதில் ஊழல் நாராயணசாமி ‘திடுக்’ தகவல்

பசு மாடு வழங்கியதில் ஊழல் நாராயணசாமி ‘திடுக்’ தகவல்

பசு மாடு வழங்கியதில் ஊழல் நாராயணசாமி ‘திடுக்’ தகவல்


UPDATED : நவ 25, 2026 07:42 PM

ADDED : நவ 25, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 07:42 PM ADDED : நவ 25, 2026 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரசு சார்பில், பசுமாடு வழங்குவதில் ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அவர், வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில், பா.ஜ., என்.ஆர்.காங்., கூட்டணி ஆட்சியில், தொடர்ந்து ஊழல்கள் நடந்து வருகிறது.

பொது பணித் துறையில் 30 சதவீத கமிஷன், ரெஸ்டோ பாருக்கு ரூ. 40 கோடி உட்பட அனைத்து துறைகளிலும் ஊழல் என விமர்சனம் செய்திருக்கிறோம். போலி மருந்து வினியோகம் செய்ததில் ரூ.10 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.

கால்நடை துறையில், பசுமாடுகள் கொடுப்பதில் ஊழல் நடந்துள்ளது. ஒரே பசுமாடு வைத்து 10 பேருக்கு மானியம் கொடுத்து, அந்த பசுவின் விலையை அதிகாரிகள் கபளீகரம் செய்துள்ளனர்.

கால்நடைகளுக்கு ரூ.4,500 வீதம் காப்பீட்டு தொகையை விவசாயிகள் செலுத்திவிட்டனர். காப்பீட்டு தொகை ரூ.1.25 கோடியை கஜானாவில் சேர்க்காமல் கொள்ளையடித்துள்ளனர். அந்தப் பணத்தை விவசாயிகளிடம் திருப்பி தரவேண்டும். சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு வழக்கை அனுப்ப வேண்டும்.

டெங்கு காய்ச்சலுக்கு நான்கு பேர் இறந்துள்ளனர். டெங்குவை சமாளிப்பதற்கான வார்டுகளை கொண்டுவரவில்லை. தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 100 பெட்டுகளை இலவசமாக டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தர வேண்டும் என கேட்க வேண்டும்.

கவர்னர், முதல்வர் பனிப் போர் காரணமாக நிர்வாகம் முடங்கியிருக்கிறது. காங்., தி.மு.க., கூட்டணி ஆட்சியில், ஜிப்மர் உடலுறுப்பு மாற்று மையம் ஆரம்பிக்க 50 ஏக்கர் நிலம் கொடுத்தோம். ரங்கசாமி ஆட்சிக்கு வந்த பின் அந்த நிலத்தை ஜிப்மர் நிர்வாகத்திடமிருந்து திரும்ப பெற்றனர்.

அம்மையத்தை திரும்ப கொண்டுவர கவர்னர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். மக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற அரசு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us