தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மருந்துவக் கல்லுாரி மாணவி தற்கொலை

மருந்துவக் கல்லுாரி மாணவி தற்கொலை

மருந்துவக் கல்லுாரி மாணவி தற்கொலை


UPDATED : நவ 25, 2026 06:19 PM

ADDED : நவ 25, 2026 06:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 06:19 PM ADDED : நவ 25, 2026 06:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் மன அழுந்த காரணமாக மருந்துவக் கல்லுாரி மாணவி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலம், பதனம்திட்டா மாவட்டம், குழேஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் மகள் லட்சுமி பிரியா, 20. இவர், காரைக்காலில் தனியார் மருந்துவக் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார்.

இவர், கோட்டுச்சேரி கீழக்காசாக்குடி கூட்டுறவு நகரில் உள்ள வாடகை வீட்டின் முதல் தளத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அருகில் வசிக்கும் குஜராத்தை சேர்ந்த சாய் ஹர்ஷ் என்பவருக்கு லட்சுமிபிரியா மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு, எனக்கு வாழப்பிடிக்கவில்லை; மன அழுத்தமாக நான் சாகப்போகிறேன் என, கூறியுள்ளார்.

பின், அவர், சென்று பார்த்தபோது பிரியா படுக்கையறையில் உள்ள மின்விசிறி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்த கோட்டுச்சேரி சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரியா உடலை மீட்டு மருந்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுக்குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us