/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
10 ஓவர் கிரிக்கெட் இறுதி போட்டி மேற்கு, வடக்கு அணிகள் தேர்வு
/
10 ஓவர் கிரிக்கெட் இறுதி போட்டி மேற்கு, வடக்கு அணிகள் தேர்வு
10 ஓவர் கிரிக்கெட் இறுதி போட்டி மேற்கு, வடக்கு அணிகள் தேர்வு
10 ஓவர் கிரிக்கெட் இறுதி போட்டி மேற்கு, வடக்கு அணிகள் தேர்வு
ADDED : ஜன 17, 2025 05:58 AM

புதுச்சேரி: 10 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டிகள் முடிவில், புதுச்சேரி மேற்கு மற்றும்வடக்கு அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி இன்று நடக்கிறது.
கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம்., நிறுவனம் சார்பில், 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான 10 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 7ம் தேதி துவங்கி சி.ஏ.பி., மைதானம் 4ல் நடந்து வருகிறது. புதுச்சேரி வடக்கு, தெற்கு, மேற்கு, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன.
நேற்று (16ம் தேதி) காலை 10:00 மணிக்கு நடந்தபோட்டியில் காரைக்கால் - புதுச்சேரி வடக்கு அணிகள் மோதின. முதலில் ஆடிய வடக்கு அணி 10 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 99 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, ஆடிய காரைக்கால் அணி 9.5 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 103 ரன்கள் எடுத்த 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காரைக்கால் அணியின் ராஜேஷ் குமார் 26 பந்துகளில் 67 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது வென்றார்.
மதியம் 12:30 மணிக்கு துவங்கிய போட்டியில் மாகேஅணியும், ஏனாம் அணியும் மோதின.முதலில் ஆடிய ஏனாம் அணி 10 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 70 ரன்கள் எடுத்தது. பின்னர், ஆடிய மாகே அணி 6.2 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 71 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மாகே அணியின் விஜீஷ் 29 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
மதியம் 3:00மணிக்கு நடந்த போட்டியில் புதுச்சேரி மேற்கு அணியும், தெற்கு அணியும் மோதின. முதலில் ஆடிய மேற்கு அணி 10 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து, 123 ரன்கள் எடுத்தது. பின் ஆடிய தெற்கு அணி 10 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுத்தது.புதுச்சேரி மேற்கு அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 27 ரன்கள் மற்றும் 2 விக்கெட் எடுத்த மேற்கு அணியின் அனித் ராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
லீக் போட்டிகள் முடிவுற்ற நிலையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த புதுச்சேரி மேற்கு மற்றும்வடக்கு அணிகளுக்கு இடையே இறுதி போட்டி இன்று (17ம் தேதி) காலை 11:30 மணிக்கு நடக்கிறது.