/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
10 ஓவர் கிரிக்கெட் போட்டி: வடக்கு, மேற்கு, தெற்கு அணிகள் வெற்றி வடக்கு, மேற்கு, தெற்கு அணிகள் வெற்றி
/
10 ஓவர் கிரிக்கெட் போட்டி: வடக்கு, மேற்கு, தெற்கு அணிகள் வெற்றி வடக்கு, மேற்கு, தெற்கு அணிகள் வெற்றி
10 ஓவர் கிரிக்கெட் போட்டி: வடக்கு, மேற்கு, தெற்கு அணிகள் வெற்றி வடக்கு, மேற்கு, தெற்கு அணிகள் வெற்றி
10 ஓவர் கிரிக்கெட் போட்டி: வடக்கு, மேற்கு, தெற்கு அணிகள் வெற்றி வடக்கு, மேற்கு, தெற்கு அணிகள் வெற்றி
ADDED : ஜன 09, 2025 06:10 AM

புதுச்சேரி: கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம். நிறுவனம் சார்பில், 40 வயதிற்கு மேற்பட்டோர்க்கான 10 ஓவர் கிரிக்கெட் போட்டி சி.ஏ.பி., மைதானத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.
இதில், புதுச்சேரி வடக்கு, தெற்கு, மேற்கு, காரைக்கால், மாகே, ஏனம் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. துவக்க விழாவில், கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரியின் கவுரவத் தலைவர் தாமோதரன், கவுரவ செயலாளர் ராமதாஸ், சீகெம் நிறுவன தலைவர் பத்மா தாமோதரன், முன்னாள் செயலாளர் சந்திரன், சி.இ.ஓ., ராஜூ மேத்தா, மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முதல் போட்டியில், புதுச்சேரி வடக்கு அணியும், மாகே அணியும் மோதின, முதலில் விளையாடிய வடக்கு அணி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 106 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆடிய மாகே அணி 10 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 77 ரன்கள் எடுத்தது. புதுச்சேரி வடக்கு அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 32 ரன்கள் எடுத்த புதுச்சேரி வடக்கு அணியின் சசிகுமார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
அடுத்த போட்டியில், புதுச்சேரி மேற்கு அணி, காரைக்கால் அணி மோதின. முதலில் விளையாடிய மேற்கு அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆடிய காரைக்கால் அணி 10 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்து. புதுச்சேரி மேற்கு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 60 ரன்கள் மற்றும் 2 விக்கெட் எடுத்த மேற்கு அணி ராஜா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
அடுத்த போட்டியில், ஏனம், புதுச்சேரி தெற்கு அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஏனம் அணி 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய புதுச்சேரி தெற்கு அணி 6.5 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 82 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புதுச்சேரி தெற்கு அணியின் ராகேஷ் 58 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றார். போட்டிகள் வரும் 17ம் தேதி வரை நடக்கிறது.