/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆன்லைனில் வேலை இருப்பதாக 10 பேரிடம் ரூ.4.50 லட்சம் மோசடி
/
ஆன்லைனில் வேலை இருப்பதாக 10 பேரிடம் ரூ.4.50 லட்சம் மோசடி
ஆன்லைனில் வேலை இருப்பதாக 10 பேரிடம் ரூ.4.50 லட்சம் மோசடி
ஆன்லைனில் வேலை இருப்பதாக 10 பேரிடம் ரூ.4.50 லட்சம் மோசடி
ADDED : ஏப் 28, 2025 04:27 AM
புதுச்சேரி: பகுதிநேர வேலை எனக்கூறி 10 பேரிடம் ரூ.4.50 லட்சம் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
முத்தியால்பேட்டையை சேர்ந்த ஆண் நபரை, டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார்.
இதைநம்பிய அவர், மர்மநபர் தெரிவித்த ஆன்லைனில் 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்துள்ளார்.
பின், அதில் சம்பாதித்த பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. அதன்பின் அந்த மர்மநபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதேபோல், மதகடிப்பட்டை சேர்ந்த நபர் 50 ஆயிரம், உழவர்கரையை சேர்ந்த நபர் 5 ஆயிரம், காலாப்பட்டை சேர்ந்தவர் 40 ஆயிரம், லாஸ்பேட்டை சேர்ந்த பெண் 8 ஆயிரம், ரெயின்போ நகரை சேர்ந்தவர் 49 ஆயிரம், லாஸ்பேட்டையை சேர்ந்த பெண் 28 ஆயிரம், மூலக்குளத்தை சேர்ந்தவர் 45 ஆயிரம், லாஸ்பேட்டையை சேர்ந்த ஒருவர் 20 ஆயிரம், மற்றொரு நபர் 50 ஆயிரம் என 10 பேர் மோசடி கும்பலிடம் 4 லட்சத்து 40 ஆயிரம் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.