ADDED : செப் 14, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் மது போதையில் தகராறு செய்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி கடற்கரை சாலை காந்திசிலை அருகே மது போதையில் தகராறு செய்வதாக பெரியக்கடை போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, அங்கு நின்ற 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், சென்னையை சேர்ந்த சதீஷ், 38; வெங்கடேசன்,39; அரணி,40; என்பது தெரியவந்தது. 3 பேரை போலீசார் கைது செய்தனர். அதே போல, அரியாங்குப்பம் பகுதியில் தகராறு செய்த கார்த்திகேயன், 50; தவளக்குப்பத்தில் பிரகாஷ், 26; அழகானந்தம், 60; முத்தியால்பேட்டையில் இளங்கோ, 18; திருக்கனுாரில் கோபால்,36; மங்கலத்தில் கமலக்கண்ணன், 29; பாகூரில் அய்யனார், 34; ஆகியோரை அந்தெந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.
