தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி

புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி

புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி


ADDED : செப் 14, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 336ம் ஆண்டு பெருவிழாவையொட்டி, நடந்த ஆடம்பர தேர்பவனியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

புனித ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழாவையொட்டி, கடந்த 4ம் தேதி கொடியேற்றம் நடந்தது.  அதனை தொடர்ந்து, ஆலயத்தில் தினந்தோறும் காலையில் திருப்பலியும், மாலையில் தேர்பவனியும் நடந்தது.  

முக்கிய விழாவான, நேற்று முன்தினம் (13ம் தேதி) காலையில் பெருவிழா திருப்பலி நடந்தது. மாலையில் நடந்த ஆடம்பர தேர்பவனியில், புதுச்சேரி – கடலுார் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.   

அதனை தொடர்ந்து, பங்குதந்தை அருள்தாஸ் முன்னிலையில் நேற்று காலை கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us