UPDATED : நவ 21, 2026 02:07 AM
ADDED : நவ 21, 2026 02:07 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செலின், 49; அரசு ஊழியர். இவர் நேற்று வழக்கம் போல் காலை வேலைக்கு சென்றார்.
அவரது தங்கை ஜாஸ்மீன் வீட்டு பூட்டு உடைந்திருப்பதாக மொபைல் போன் மூலம் காலை 9:30 மணிக்கு செலினுக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து வீட்டிற்கு வந்த செலின், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 சவரன் தங்க நகைகள், 65 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருப்பது தெரி யவந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில் உருளையான்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
