போக்குவரத்து விதிமீறல் அபராதம் தகவல் தெரிவிக்க வலியுறுத்தல்
போக்குவரத்து விதிமீறல் அபராதம் தகவல் தெரிவிக்க வலியுறுத்தல்
UPDATED : நவ 21, 2026 01:47 AM
ADDED : நவ 21, 2026 01:47 AM
புதுச்சேரி: போக்குவரத்து விதிமீறல்களுக்காக கேமரா மூலம் அபராதம் விதித்தால், வாகன உரிமையாளருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என, அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., டி.ஐ.ஜி., சத்தியசுந்தரத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை:
புதுச்சேரியில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஆன்லைன் அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. இதனை வரவேற்கிறோம். விதிகள் மீறும் வாகன ஓட்டிகள் சிக்னல்களில் உள்ள கேமராக்கள் மூலமாகவோ, போக்குவரத்து போலீசார் எடுக்கும் புகைப்படங்கள் மூலமாகவோ அபராதம் பதிவு செய்யப் படுகிறது.
ஆனால், அபராதம் விதிக்கப்பட்டதற்கான காரணம் என்ன, எந்த விதி மீறப்பட்டது. எப்போது, எங்கு நடந்தது என்பன உரிமையாளர்களுக்கு குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், மின்னஞ்சல் மூலம் உடனே தகவல் தெரிவிக்கப்படுவதில்லை.
அபராதம் விதிக்கப்பட்டது குறித்த அறிவிப்பு கிடைக்காததால், வாகன உரிமையாளர்கள் அதை உரிய நேரத்தில் செலுத்தவோ, தவறாக விதிக்கப்பட்டிருந்தால் விளக்கம் கேட்கவோ வாய்ப்பில்லாமல் போகிறது.
பலருக்கு அபராதம் நிலுவையில் இருப்பது, வாகனத்தின் எப்.சி.புதுப்பித்தல், பெயர் மாற்றம் போன்ற பணிகளுக்காக அலுவலகங்களை அணுகும் போது தான் தெரிய வருகிறது. அபராதம் குறித்த விளக்கம் கேட்டு காவல் நிலையங்களை அணுகும் வாகன உரிமையாளர்களுக்கு முறையான தகவல் வழங்கப்படாமல், ஆன்லைனில் அபராதத்தை செலுத்துமாறு மட்டும் கூறப்படுவதாக புகார்கள் வருகின்றன.
மாதாந்திர இலக்குகளை எட்டுவதற்காக வாகனங்களை தோராயமாக படம் எடுத்து வழக்குகள் பதிவு செய்யப்படுகிறதா என்ற சந்தேகமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
இது குறித்து காவல்துறை வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும். எனவே, புதுச்சேரி காவல்துறை கேமரா அல்லது புகைப்பட ஆதாரத்தின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டால், வாகன உரிமையாளருக்கு உடனே குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப் மூலம் த கவல் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு கூறப்பட் டுள்ளது.
