தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பெண்ணிடம் ரூ. 3.50 லட்சம் மோசடி வாலிபருக்கு போலீசார் வலை

பெண்ணிடம் ரூ. 3.50 லட்சம் மோசடி வாலிபருக்கு போலீசார் வலை

பெண்ணிடம் ரூ. 3.50 லட்சம் மோசடி வாலிபருக்கு போலீசார் வலை


UPDATED : நவ 21, 2026 12:00 AM

ADDED : நவ 21, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 12:00 AM ADDED : நவ 21, 2026 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: குறைந்த வட்டியில் நகை அடகு வைத்து தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மோசடி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெட்டப்பாக்கம் அடுத்த சூரமங்கலம் வி.வி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் பிரேமா, 37; சூரமங்கலத்தில் தையல் கடை நடத்தி வருகிறார். இவரிடம் கல்மண்டபத்தை சேர்ந்த கோபிநாத், 33, என்பவர், நான் தனியார் யு.பி.ஐ., சேவையில் வேலை செய்வதாக கூறி, தன்னிடம் தங்க நகைகள் கொடுத்தால் குறைந்த வட்டிக்கு வைத்து தருவதாக கூறியுள்ளார்.

இதனை நம்பிய பிரேமா, கடந்த ஜூன் மாதம் அவரிடம் 30 கிராம் தங்க நகைகளை கொடுத்தார். அதனை கோபிநாத் அடகு வைத்தார். பின், 4 மாதம் கழித்து பிரேமா தனது நகையை மீட்டுக் கொடுக்குமாறு கோபிநாத்திடம் கேட்டுள்ளார்.

இதற்கு தங்க நகைகளை கொடுக்க முடியாது. இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என, மிரட்டியுள்ளார். இதுகுறித்து பிரேமா கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து கோபிநாத்தை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us