தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பால் விலையை உயர்த்த வலியுறுத்தி பாண்லே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பால் விலையை உயர்த்த வலியுறுத்தி பாண்லே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பால் விலையை உயர்த்த வலியுறுத்தி பாண்லே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : நவ 20, 2026 08:52 PM

ADDED : நவ 20, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 08:52 PM ADDED : நவ 20, 2026 08:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை உயர்த்த வலியுறுத்தி, புதுச்சேரி பாண்லே தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குருமாம்பேட் பாண்லே தலைமை அலுவலகம் எதிரே நடந்த போராட்டத்தில் தொழிற்சங்க தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.

பின் தொழிற்சங்க தலைவர்கள் கூறியதாவது:

பாண்லே நிறுவனத்திற்குத் தினசரி 1 லட்சம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. இதில் உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து 25 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. எஞ்சியுள்ள 75 ஆயிரம் லிட்டர் பால் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, அண்டை மாநிலங்களிலிருந்து தினசரி கொள்முதல் செய்யப்படுகிறது.

உள்ளூரில் ஒரு லிட்டர் பால் ரூ.37-க்குக் கொள்முதல் செய்யப்படும் நிலையில், கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து லிட்டர் ரூ.53.21 என்ற விலைக்கு வாங்கப்படுகிறது. ஆனால், நுகர்வோருக்கு ஒரு லிட்டர் பால் ரூ.46க்கே விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை வித்தியாசத்தால் பாண்லே நிறுவனத்திற்கு தினசரி ரூ.20 லட்சம் வீதம், மாதத்திற்கு ரூ.6 கோடி, ஆண்டிற்கு 72 கோடி ரூபாய் வரை கடும் நஷ்டம் ஏற்படுகிறது.

ஏற்கனவே பாண்லே நிறுவனம் ரூ.80 கோடி நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், கொள்முதல் மற்றும் விற்பனை விலையை உயர்த்தினால் மட்டுமே நிறுவனத்தைப் காப்பாற்ற முடியும். எனவே, பாண்லே பால் கொள்முதல் விலையை ரூ.46 ஆகவும், விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.60-ஆக உயர்த்த வேண்டும் என, வலியுறுத்தினர்.

இக்கோரிக்கையை நிறைவேற்ற தவறினால், ஏற்கனவே மூடப்பட்ட பாஸ்கோ மற்றும் பாசிக் ஆகிய அரசு நிறுவனங்களுக்கு ஏற்பட்ட அதே நிலைதான் பாண்லே நிறுவனத்திற்கும் ஏற்படும் என, தொழிற்சங்க நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us