தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பெண் காவலர் பாலியல் விவகாரம் எஸ்.பி., சுப்ரமணியன் ‘டிஸ்மிஸ்’: புதுச்சேரி கவர்னர் அதிரடி

பெண் காவலர் பாலியல் விவகாரம் எஸ்.பி., சுப்ரமணியன் ‘டிஸ்மிஸ்’: புதுச்சேரி கவர்னர் அதிரடி

பெண் காவலர் பாலியல் விவகாரம் எஸ்.பி., சுப்ரமணியன் ‘டிஸ்மிஸ்’: புதுச்சேரி கவர்னர் அதிரடி


UPDATED : நவ 20, 2026 08:42 PM

ADDED : நவ 20, 2026 08:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 08:42 PM ADDED : நவ 20, 2026 08:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் பெண் காவலர் பாலியல் விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி., சுப்ரமணியன் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியபோது, அங்கு பணியில் இருந்த 28 வயதுடைய திருமணமான பெண் காவலருடன் எஸ்.பி., சுப்ரமணியனுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின், அவர் புதுச்சேரிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட பிறகும், பெண் காவலருடன் வீடியோ அழைப்புகள் மூலம் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

இதுகுறித்து பெண் காவலரின் கணவருக்கு தெரிய வந்ததால், தம்பதியிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது கணவர் எஸ்.பி., சுப்ரமணியன் மீது டி.ஜி.பி.,யிடம் புகார் அளித்தார்.

அதையடுத்து, டி.ஜி.பி., உத்தரவின்பேரில், சுப்ரமணியன் கடந்த செப்., 25ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த செப்., 29ம் தேதி காரைக்கால் நகர காவல் நிலையத்தில் சுப்ரமணியன் மீது பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில்,சுப்ரமணியனுக்கு அக்., 28ம் தேதி முன்ஜாமின் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2ம் தேதி காரைக்கால் நீதிமன்றத்தில் எஸ்.பி., சுப்ரமணியன் ஆஜரானார்.

பின், நீதிபதி நிபந்தனை ஜாமின் அடிப்படையில் விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் கடந்த 16ம் தேதி வரை 15 நாட்கள் நகர காவல் நிலையத்தில் சுப்ரமணியன் ஆஜராகி கையெழுத்திட்டார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் காவலருக்கு உரிய நீதி கிடைக்கவில்லை; எஸ்.பி., மீது உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என, பாதிக்கப்பட்ட பெண் காவலர் தரப்பினர் கடந்த 12ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையிடு செய்தனர்.

இதினிடையே புதுச்சேரி கவர்னர் கைலாசநாதன் அறிவுறுத்தலின்படி, எஸ்.பி., சுப்ரமணியனை பணி நீக்கம் செய்து தலைமை செயலகம் உத்தரவு பிறப்பித்துள்து. எஸ்.பி.,பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரி போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us