தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மண்டல அலவிலான அறிவியல் கண்காட்சி டி.வி.ஆர்., நினைவு சுழற்கோப்பை வழங்கல்

மண்டல அலவிலான அறிவியல் கண்காட்சி டி.வி.ஆர்., நினைவு சுழற்கோப்பை வழங்கல்

மண்டல அலவிலான அறிவியல் கண்காட்சி டி.வி.ஆர்., நினைவு சுழற்கோப்பை வழங்கல்


UPDATED : நவ 20, 2026 09:06 PM

ADDED : நவ 20, 2026 09:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 09:06 PM ADDED : நவ 20, 2026 09:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுாரில் நடந்த மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளுக்கு கவர்னர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில், 2026ம் ஆண்டிற்கான மண்டல அளவில் அறிவியல் கண்காட்சி, வில்லியனுார் விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 19ம் தேதி துவங்கியது.

இதில், புதுச்சேரி உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்றன. தொடக்கப் பள்ளி பிரிவில் 94 படைப்புகள், இடைநிலைப் பள்ளி பிரிவில் 132, உயர்நிலைப் பள்ளி பிரிவில் 117, மேல்நிலைப் பள்ளி பிரிவில் 67, ஆசிரியர் பிரிவில் 18, என, மொத்தம் 428 படைப்புகள் இடம்பெற்றன.

இரண்டு நாட்கள் நடந்த கண்காட்சியில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்து நேற்று மாலை பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளிக் கல்வி துறை செயலர் கிருஷ்ணமோகன் உப்பு வரவேற்றார். கல்வி அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். கவர்னர் கைலாஷ்நாதன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

கண்காட்சியில் தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., நினைவு சுழற் கோப்பையை தொடக்கப்பள்ளி பிரிவில் முதல் பரிசு பெற்ற கதிர்காமம் தில்லையடி வள்ளியம்மை அரசு பள்ளி மற்றும் திருவண்டார்கோவில் நவதுர்கா ஆங்கில பள்ளியும், இடைநிலைப் பள்ளி பிரிவில் இந்திரா நகர் இந்திராகாந்தி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கொம்பாக்கம் அமலோர்பவம் லுார்து அகடமி பள்ளியும், உயர்நிலைப் பள்ளி பிரிவில் பன்னித்திட்டு அரசு பள்ளி மற்றும் அகரம் பாரத் வித்யாஷ்ரம் பள்ளியும், மேல்நிலைப் பிரிவில் வில்லியனுார் விவேகானந்த அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஒதியம்பட்டு குளுனி பள்ளிக்கும் வழங்கப்பட்டது.

சாம்பியன் பட்டத்தை இந்திரா நகர் இந்திராகாந்தி அரசு மேல்நிலைப் பள்ளி தட்டிச்சென்றது. பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மோகன்குமார், இணை இயக்குனர் சிவகாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us