/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேங்காய்திட்டு வித்யாபவன் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

ADDED : மே 09, 2025 03:28 AM

புதுச்சேரி: தேங்காய்திட்டு வித்யாபவன் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பள்ளி அளவில் மாணவர் ரப்பியாக் குல்சன் 582 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மாணவர் லிங்கேஸ்வரன் 567 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி ஷாஸ்திரி 558 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். கம்பியூட்டர் சயின்ஸ் பாடத்தில் மாணவர் ரப்பியாக்குல்சன், கம்பியூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் மாணவர் லிங்கேஸ்வரன் சென்டம் எடுத்துள்ளனர்.
தமிழ்பாடத்தில் 12 மாணவர்களும், பிரஞ்ச் பாடத்தில் 5 மாணவர்கள், இந்தியில் ஒரு மாணவர், ஆங்கிலம் பாடத்தில் 6, இயற்பியல் பாடத்தில் ஒருவர், பயாலாஜி 5, கம்பியூட்டர் சயின்ஸ் 9, கணிதம் பாடத்தில் 13, காமர்ஸ் பாடத்தில் 3, அக்கவுன்டன்சி பாடத்தில் 2, பிஸ்னஸ் கணிதம் ஒருவர், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் 4 மாணவர்கள் 90 மதிப்பெணகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் ரேகா, சேர்மன் ராஜசேகரன் ஆகியோர் சால்வை அணிவித்து, வாழ்த்தினர்.