/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
6 மாதங்களில் 1,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் தகவல்
/
6 மாதங்களில் 1,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் தகவல்
6 மாதங்களில் 1,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் தகவல்
6 மாதங்களில் 1,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் தகவல்
ADDED : மே 24, 2025 03:23 AM

புதுச்சேரி: பாண்லேயில் 20 ஆயிரம் லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்திக் கூடம் அமைக்கும் பணியை, முதல்வர் ரங்கசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
குஜராத் கூட்டுறவு பால் விற்பனை இணையத்துடன் பாண்லே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தினமும் 10 ஆயிரம் லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்து வருகிறது. இதனை அதிகரிக்க, கோன் ஐஸ்கிரீம் உற்பத்தியை தொடங்கவும், விரைவாக கெட்டிப்படுத்தும் வசதியினை ஏற்படுத்த, புதிதாக 20 ஆயிரம் லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்திக் கூடம், 34 கோடி ரூபாயில், நிறுவப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை, முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்து பேசுகையில்;
படித்த இளைஞர்கள் வேலையில்லை என, சொல்லக்கூடாது. அவர்கள் கறவை மாடுகள் வளர்த்து மினி பால் பண்ணை வைக்க வேண்டும். கிராமப்பகுதி மட்டுமின்றி நகர பகுதியில் படித்த இளைஞர்களும் குறைந்த அளவில் மாடுகளை வளர்த்து வருமானத்தை ஈட்ட வேண்டும். இதனால் புதுச்சேரியில் பால் உற்பத்தியையும் பெருக்க முடியும்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளில், 4 ஆயிரம் பணியிடங்களை நிரப்பி இருக்கிறோம். அடுத்த 6 மாதங்களில் அரசு துறைகளில் ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும்' என்றார்.
நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன்குமார், தேசிய பால்வள வாரியத்தின் தலைவர் மீனேஷ் ஜா, தலைமை செயலர் சரத் சவுகான், அரசு செயலர் ஜெயந்த் குமார் ரே, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தையா, பாண்லே மேலாண் இயக்குநர் ஜோதிராஜூ உட்பட பலர் பங்கேற்றனர்.