/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கோவிலில் 1008 சங்காபிேஷகம்
/
மணக்குள விநாயகர் கோவிலில் 1008 சங்காபிேஷகம்
ADDED : ஏப் 01, 2025 04:07 AM
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில், 10ம் ஆண்டு மகா கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, சஹஸ்ர சங்காபிேஷக விழா வரும் 11ம் தேதி நடக்கிறது.
மணக்குள விநாயகர் கோவிலின் 10ம் ஆண்டு கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, சஹஸ்ர சங்காபிேஷகம் விழா வரும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடக்கிறது.இதையொட்டி, வரும் 7ம் தேதி காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மூலவர் அபி ேஷகம் நடக்கிறது.
8ம் தேதி காலை 8:00 மணிக்கு 27 நட்சத்திரங்களின் கோமாதா பூஜையும், 9ம் தேதி காலை 6:30 மணிக்கு மேல் ஏகதின லட்சார்ச்சனை, 10ம் தேதி மாலை 6:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாரானை நடக்கிறது.
முக்கிய நிகழ்வாக, வரும் 11ம் தேதி காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, விசேஷ ஹோம திரவ்யாஹூதி, தீபாராதனை, 9:30 மணிக்கு யாத்திராதானம், கலசம் புறப்பாடு, மூலவர் மணக்குள விநாயகருக்கு கலசாபிேஷகத்துடன் 1008 சங்கா பிேஷகம் நடக்கிறது.இரவு 7:00 மணிக்கு உற்சவமூர்த்தி சிறப்பு அலங் காரத்தில் வீதியுலா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன் மற்றும் சிவாச்சாரியார்கள், ஊழியர் கள் செய்து வருகின்றனர்.