sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காங்கிரஸ் கட்சியை பொதுவெளியில் அவமதித்தால் வேடிக்கை பார்க்க மாட்டோம்; திமுக எம்எல்ஏவை விளாசிய கரூர் ஜோதிமணி

/

காங்கிரஸ் கட்சியை பொதுவெளியில் அவமதித்தால் வேடிக்கை பார்க்க மாட்டோம்; திமுக எம்எல்ஏவை விளாசிய கரூர் ஜோதிமணி

காங்கிரஸ் கட்சியை பொதுவெளியில் அவமதித்தால் வேடிக்கை பார்க்க மாட்டோம்; திமுக எம்எல்ஏவை விளாசிய கரூர் ஜோதிமணி

காங்கிரஸ் கட்சியை பொதுவெளியில் அவமதித்தால் வேடிக்கை பார்க்க மாட்டோம்; திமுக எம்எல்ஏவை விளாசிய கரூர் ஜோதிமணி

21


ADDED : ஜன 26, 2026 09:27 PM

Google News

ADDED : ஜன 26, 2026 09:27 PM

21


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது? காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என்று ஜோதிமணி காட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திமுக எம்எல்ஏ கோ.தளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள் நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது?

காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை ராகுல் முடிவு செய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை. அதே போல காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.

களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதியும், முதல்வர் ஸ்டாலினுக்காகவும் தான் அனுசரித்துப் போகிறோம்.அமைதி காக்கிறோம். கூட்டணியின் கண்ணியம் கருதி இதுவரை நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கூட பேசவேண்டிய இடத்தில் தான் பேசியிருக்கிறேன்.

வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் நீங்கள். அதே கண்ணியத்தை நீங்களும் கடைபிடிப்பதுதான் நல்லது. தமிழகத்தில் இண்டியா கூட்டணியின் தலைவராக பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதல்வர் ஸ்டாலினை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது. இவ்வாறு ஜோதிமணி கூறியுள்ளார்.

திமுக எம்எல்ஏ சொன்னது என்ன?

காங்கிரஸ் கட்சிக்கு வார்டில் பூத் கமிட்டி போடக்கூட ஆளில்லை,'' என்று மதுரை திமுக எம்எல்ஏ தளபதி காட்டமாக விமர்சித்தார்.

திமுக எம்எல்ஏ பேசியதை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.






      Dinamalar
      Follow us