தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போராட்டம்

 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போராட்டம்

 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போராட்டம்


ADDED : ஆக 28, 2026 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 04:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அரசு ஊழியர்களின் சம்மேளன இணைப்பு சங்கங்களின் கூட்டு இயக்கத்தில் உள்ள புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள சுகாதாரத்துறையில் பணி புரியும் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டசபை அருகில் உள்ள சம்பா கோவில் பகுதியில், நேற்று மாலை 5:30 மணியளவில், நடந்த போராட்டத்தில், சங்க தலைவர் புருேஷாத்தமன், பொதுச்செயலார் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கடந்த 20 ஆண்டுகளாக பணி செய்யும் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டிரைவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்காமல் உள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தப்பட்டது.

நேற்று நடந்த போராட்டத்தை தொடர்ந்து, இன்றும் (28ம் தேதி) சம்பா கோவில் அருகே தர்ணா போராட்டம் நடத்த உள்ளனர். நாளை (29ம் தேதி) கம்பன் கலையரங்கம் அருகில் இருந்து ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தங்கள் குடும்பத்துடன் பேரணியாக சென்று, சட்டசபையை முற்றுகையிட முடிவு செய்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us