sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 12ம் தேதி முதல் வேலை நிறுத்தம்

/

 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 12ம் தேதி முதல் வேலை நிறுத்தம்

 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 12ம் தேதி முதல் வேலை நிறுத்தம்

 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 12ம் தேதி முதல் வேலை நிறுத்தம்


ADDED : பிப் 10, 2026 04:57 AM

Google News

ADDED : பிப் 10, 2026 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வரும் 12ம் தேதி முதல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள, சம்பள உயர்வு, போனஸ் என பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை. இதனை கண்டித்து புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் பணியாற்றி வரும் ஊழியர்கள் வரும் 12ம் தேதி முதல் தொடர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

நேற்று அடையாள போராட்டமாக புதுச்சேரியில் உள்ள சுகாதார துறை எதிரே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கவுரவ தலைவர் ஜெயபாலன் கண்டன உரையாற்றினார். சங்க தலைவர் புருேஷாத்தமன், பொது செயலாளர் பிரபாகரன், துணை தலைவர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் கூறுகையில், தேசிய சுகாதார இயக்கத்தின் 108 ஆம்புலன்ஸ் சேவையில் கால் ஆபரேட்டர்கள், டெக்னீஷயன்கள் பணிபுரிந்து வரும் சூழ்நிலையில் ஓட்டுநர்கள் மட்டும் இத்திட்டத்தின் கீழ் வரவில்லை என்பது சட்ட மரபுக்கு முரணானது. இதனால், கடந்த 2020ம் ஆண்டு முதல் சம்பளம், போனஸ், ஊதிய உயர்வு மறுக்கப்பட்டு வருகின்றது. எனவே நியாயமான கோரிக் கையை வலியுறுத்தி வரும் 12ம் தேதி முதல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எனவே புதுச்சேரியில்-8, காரைக்கால்-5, ஏனாம்-1 என 14 ஆம்புலன்ஸ் சேவைகள் பாதிக்கப்படும். பொதுமக்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us