ADDED : ஏப் 11, 2025 04:08 AM
புதுச்சேரி: அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி இன்று 108 பால்குட அபிேஷகம் இன்று நடக்கிறது.
புதுச்சேரி, அரியாங்குப்பத்தில் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு 11ம் ஆண்டு பங்குனி உத்திரம் 108 பால்குட பெருவிழா இன்று (11ம் தேதி) நடக்கிறது.
இதையொட்டி, காலை 7:30 மணிக்கு கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு, பக்தர்கள் 108 பால்குடங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து, விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி, மாரியம்மன், முத்தீஸ்வரர் சுவாமிகளுக்கு பால் அபிேஷகம் செய்கின்றனர்.
ஏற்பாடுகளை சிவசக்தி வேலன் ஆன்மிகக் குழுவின் கந்தர் சஷ்டி, தைபூச விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

