/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கெங்கையம்மன் கோவிலில் 108 குடம் பால் அபிேஷகம்
/
கெங்கையம்மன் கோவிலில் 108 குடம் பால் அபிேஷகம்
ADDED : ஆக 04, 2025 07:30 AM

புதுச்சேரி : முதலியார்பேட்டையில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் 31வது ஆண்டு 108 குடம் பால் அபிேஷகம் நடந்தது.
முதலியார்பேட்டை, ஒத்தவாடை வீதியில் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு 31ம் ஆண்டு 108 குடம் பால் அபிேஷக விழா நேற்று நடைபெற்றது. விழாவை யொட்டி, காலை 8:00 மணிக்கு மாங்காளியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் 108 பால்குடங்களை ஊர்வலமாக கெங்கையம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
பின், கெங்கையம்மனுக்கு, 108 குடம் பால் அபிேஷகம் செய்யப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்தனர்.