
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் :காட்டேரிக்குப்பம் திரவுபதியம்மன் கோவிலில் தை மாதத்தை முன்னிட்டு பால்குட அபிஷேகம் நடந்தது.
மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பத்தில் திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தை மாத முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, 108 பால்குட ஊர்வலம் மற்றும் அபிஷேகம் நேற்று நடந்தது.
இதையொட்டி, காலை 7:00 மணிக்கு ஓம்சக்தி அம்மன் கோவிலில் இருந்து பெண்கள் 108 பால் குடங்களை ஊர்வலமாக கொண்டு வந்து, திரவுபதியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
இதில், அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் துணை சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
மாலை 3:00 மணிக்கு அம்மனுக்கு ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.