மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 11 புகார் மனுக்களுக்கு தீர்வு
மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 11 புகார் மனுக்களுக்கு தீர்வு
UPDATED : நவ 28, 2026 11:06 PM
ADDED : நவ 28, 2026 11:06 PM

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் நடந்த மக்கள் மன்றத்தில் 11 புகார் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.
புதுச்சேரி குற்றப் புலனாய்த்துறை போலீஸ் ஸ்டேஷனில் நேற்ற நடந்த மக்கள் மன்றத்தில் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் மக்கள் கொடுத்த புகார் மனு மீது விசாரணை நடத்தினார்.
அதே போன்று, போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் சீனியர் எஸ்.பி., திவ்யா, காரைக்காலில் சீனியர் எஸ்.பி., வினய்குமார், புதுச்சேரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., சுருதி யாரகட்டி, சேதராப்பட்டில் எஸ்.பி., வம்சீதர ரெட்டி, கிருமாம்பாக்கத்தில் எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன், மாகியில் எஸ்.பி., தனசேகரன், ஏனாமில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மன் ஆகியோர் மக்கள் கொடுத்த புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தினர்.
40 புகார் மனுக்களில் 11 மனுக்கள் மீது விசாரணை நடத்தி உடனடியாக தீர்வு காணப்பட்டது.
