தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 12 ஜோதிர்லிங்க தரிசனம் கவர்னர் அபிேஷகம்

12 ஜோதிர்லிங்க தரிசனம் கவர்னர் அபிேஷகம்

12 ஜோதிர்லிங்க தரிசனம் கவர்னர் அபிேஷகம்


ADDED : ஆக 16, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 07:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த 12 ஜோதிர்லிங்க தரிசனத்தில் நேற்று கவர்னர் கைலாஷ்நாதன் அபிேஷகம் செய்து, சிவபுராண பாராயணம் செய்தார்.

திருச்சி சீராத்தோப்பில், பிரமாண்டமாக கட்டபட்டு வரும் ஜோதிர்லிங்க கோவிலில், பக்தர்கள் தங்கள் கைகளால்,  சிவலிங்கத்திற்கு அபிேஷகம் செய்யும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு, பிரதிஷ்டை செய்யப்பட உள்ள 12 ஜோதிர்லிங்கங்களும் பொதுமக்கள் தங்கள் கைகளால், அபிேஷகம் செய்து வழிபடும் வகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரிக்கு கடந்த 14ம் தேதி முதல் நேற்று (16ம் தேதி) வரை 12 ஜோதிர் லிங்கங்களுக்கும், லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள விவேகானந்தா பள்ளி வளாகத்தில், அபிேஷகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

கடைசி நாளான நேற்று கவர்னர் கைலாஷ்நாதன், கலந்து கொண்டு, 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் அபிேஷகம் செய்து, தீபாராதனை செய்தார். தொடர்ந்து, பக்தர்களுடன் சேர்ந்து, சிவபுராண பாராயணம் செய்தார். முன்னதாக உடுமலைபேட்டை ஆத்மாலயம் மடம் சுவாமிக்கு பிரியானந்த சரஸ்வதி ஆசியுரை வழங்கினார்.

இந்து முன்ணணி கோட்ட செயலாளர் முருகையன், மாநில தலைவர் சனில்குமார், மாநில செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை புதுச்சேரியில் உள்ள அனைத்து சிவனடியார்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us