/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீசாரின் 2 நாள் அதிரடி சோதனையில் லாட்டரி விற்ற 12 பேர் கைது; : ரூ. 1.27 லட்சம் பறிமுதல்
/
போலீசாரின் 2 நாள் அதிரடி சோதனையில் லாட்டரி விற்ற 12 பேர் கைது; : ரூ. 1.27 லட்சம் பறிமுதல்
போலீசாரின் 2 நாள் அதிரடி சோதனையில் லாட்டரி விற்ற 12 பேர் கைது; : ரூ. 1.27 லட்சம் பறிமுதல்
போலீசாரின் 2 நாள் அதிரடி சோதனையில் லாட்டரி விற்ற 12 பேர் கைது; : ரூ. 1.27 லட்சம் பறிமுதல்
ADDED : நவ 09, 2024 06:29 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் இரு நாட்கள் நடந்த போலீசாரின் சோதனையில், தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற 12 பேர் கைது செய்து, ரூ. 1.27 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி.யாக பொறுப்பேற்ற கலைவாணன், புதுச்சேரியில் நடக்கும் சட்ட விரோத லாட்டரி சீட்டு விற்பனையை ஒழிக்க சிறப்பு அதிரடிப்படைக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கணேஷ் தலைமையிலான போலீசார் கடந்த 2 நாட்களாக புதுச்சேரி முழுதும் திடீர் சோதனையில் இறங்கினர்.
இதில் நேற்று முன்தினம் வில்லியனுார், கோரிமேடு மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 1.20 லட்சம் பணமும், 8 மொபைல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
2வது நாளான நேற்று உருளையன்பேட்டை போலீஸ் நிலையம் அருகே மறைமலையடிகள் சாலை மேம்பாலம் அருகே லாட்டரி சீட்டு விற்ற, நெல்லித்தோப்பு ஒத்தவடை வீதியைச் சேர்ந்த ராமராஜ், 60; என்பவரை கைது செய்தனர். ராமராஜிடம் இருந்து ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 3 நம்பர் லாட்டரி மற்றும் கேரளா உள்ளிட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள், 1 மொபைல் போன், ரூ. 7000 பணத்தை பறிமுதல் செய்தனர். இரு நாட்களில் மொத்தம் 8 வழக்கு களில் 12 பேர் கைது செய்யப்பட்டு, ரூ. 1.27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சீனியர் எஸ்.பி., கலைவாணன் கூறுகையில்; லாட்டரி சீட்டு விற்பனை கும்பலின் முக்கிய குற்றவாளியான முத்தியால்பேட்டை சரவணன் தலைமறைவாக உள்ளார். சட்ட விரோத லாட்டரி விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என கூறினார்.