/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.ஆர்.டி.சி.,க்கு புதிதாக 12 பஸ்கள் இயக்கம்: கவர்னர், முதல்வர் கொடி அசைத்து துவக்கி வைப்பு
/
பி.ஆர்.டி.சி.,க்கு புதிதாக 12 பஸ்கள் இயக்கம்: கவர்னர், முதல்வர் கொடி அசைத்து துவக்கி வைப்பு
பி.ஆர்.டி.சி.,க்கு புதிதாக 12 பஸ்கள் இயக்கம்: கவர்னர், முதல்வர் கொடி அசைத்து துவக்கி வைப்பு
பி.ஆர்.டி.சி.,க்கு புதிதாக 12 பஸ்கள் இயக்கம்: கவர்னர், முதல்வர் கொடி அசைத்து துவக்கி வைப்பு
ADDED : மார் 02, 2024 06:27 AM

புதுச்சேரி : பி.ஆர்.டி.சி.க்கு புதிதாக வாங்கப்பட்ட 12 பஸ்களை கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
புதுச்சேரி பட்ஜெட்டில் பி.ஆர்.டி.சி.க்கு, தொலைதுார வழித்தடத்தில் இயக்கப்படும் பழைய பஸ்கள் மாற்றி புதிய பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்காக ரூ. 17.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் மூலம் 38 புதிய பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டது. தகுதி மற்றும் விலை அடிப்படையில் அசோக் லைலேன்டு நிறுவனம் தேர்வு செய்து அதற்கான ஆணை வழங்கப்பட்டது. ஒப்பந்தபடி, 3 வகையான பஸ் பாடி கட்டுவதிற்கு பெங்களூரு நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டது.
38 பஸ்களில், 26 பஸ்கள் புதுச்சேரிக்கும், 12 பஸ்கள் காரைக்காலில் இயக்கப்பட உள்ளது.
புதுச்சேரியில் இருந்து மாகிக்கு 2, நாகர்கோவிலுக்கு 2, பெங்களூர் 2, குமுளி 2, திருப்பதி 2, சென்னைக்கு 7, நாகப்பட்டினம் 1, விழுப்புரம் 4, கடலுார் 4 இயக்கப்பட உள்ளது. காரைக்காலில் இருந்து கோயம்புத்துாருக்கு 2, சென்னைக்கு 6, கும்பகோணத்திற்கு 2, சிதம்பரத்திற்கு 2 இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக 12 பஸ்கள் பாடி கட்டும் பணி முடிந்து புதுச்சேரி கொண்டுவரப்பட்டது.
புதிய பஸ்கள் துவக்க விழா நேற்று நடந்தது. கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி கொடி அசைத்து பஸ்களை துவக்கி வைத்தனர்.
இந்த 12 புதிய பஸ்கள், புதுச்சேரியில் இருந்து மாகிக்கு 2, திருப்பதிக்கு 1, நாகப்பட்டினத்திற்கு 1, விழுப்புரம் வழித்தடத்தில் 2, சென்னைக்கு 2, பெங்களூரு 1, காரைக்காலில் இருந்து கோயம்புத்துாருக்கு 1, கும்பகோணத்திற்கு 2 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், ரமேஷ்பரம்பத், அரசு செயலர் முத்தம்மா, போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், துணை போக்குவரத்து ஆணையர் குமரன், பொதுமேலாளர் சந்திரகுமரன், பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

