/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
12.5 சவரன் நகை திருட்டு கார் டிரைவர் மீது வழக்கு
/
12.5 சவரன் நகை திருட்டு கார் டிரைவர் மீது வழக்கு
ADDED : ஆக 27, 2025 07:03 AM
புதுச்சேரி : ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் 12.5 சவரன் நகை திருடுபோனது வழக்கில் கார் டிரைவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முத்தியால்பேட்டை, வ.உ.சி.,நகரை சேர்ந்தவர் சேகர், 68; ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்.இவரது வீட்டின் கீழ்தளத்தில் மகன் வெங்கடேஷ் கார்த்திக், அவரது மனைவியும், மேல்தளத்தில் சேகர் மற்றும் அவரது மனைவி வசித்து வருகின்றனர். இவரது வீட்டிற்கு, கார் டிரைவராக லாஸ்பேட்டையை சேர்ந்த கருணாகரன் என்பவர் கடந்த 2023ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார்.
கடந்த ஜூலை 2ம் தேதி கீழ்தளத்தில் வசித்து வரும் மருமகள் ராஜ வர்ஷினியின் 7 சவரன் தாலி செயின்திருடு போனது.
தாலிசெயின் என்பதால் சென்டிமென்ட் காரணமாகபுகார் அளிக்கவில்லை. தொடர்ந்து, கடந்த 18ம் தேதி சேகரின் மனைவி ராஜேஸ்வரியின் 5 சவரன் செயின், அரை சவரன் டாலர் திருடுபோனது.இதையடுத்து, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., பதிவுகளை பார்வையிட்டபோது, டிரைவர் கருணாகரனை தவிர வேறு யாரும் வீட்டில் வந்து சென்றதாக தெரியவில்லை.
இதுகுறித்து சேகர் அளித்த புகாரின் பேரில், டிரைவர் கருணாகரன் மீது முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.