/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 1,300 போலீசார்: டி.ஐ.ஜி., தகவல்
/
புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 1,300 போலீசார்: டி.ஐ.ஜி., தகவல்
புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 1,300 போலீசார்: டி.ஐ.ஜி., தகவல்
புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 1,300 போலீசார்: டி.ஐ.ஜி., தகவல்
ADDED : டிச 24, 2024 05:46 AM

புதுச்சேரி: கிறிஸ்துமஸ், புத்தாண்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து வியாபாரிகள் மற்றும் வணிக சங்க நிர்வாகிகளுடன் போக்குவரத்து போலீசார் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதிதி ஓட்டலில் நடந்த கூட்டத்திற்கு ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா தலைமை தாங்கினார்.
டி.ஐ.ஜி., சத்யசுந்தரம் பேசுகையில், 'நகரின் முக்கிய பிரச்னை ஆக்கிரமிப்பு மற்றும் பார்க்கிங். வியாபாரிகள் நடைபாதை, சாலை ஆக்கிரமிப்புகளை தவிர்க்க வேண்டும். இன்று முதல் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஒயிட் டவுன் முழுதும் விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார் மற்றும் 300 டிராபிக் போலீசார் ஈடுபடுவர். பயிற்சியில் உள்ள ஊர்காவல்படையினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்களும் பங்கேற்பர். கொண்டாட்டத்தின் போது கடலில் நடக்கும் உயிரிழப்புக்களை தடுக்க கடலோர காவல்படை ரோந்து படகு மற்றும் டிரோன் மூலம் கண்காணிக்கும் பணி நடக்கும். 10 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்படும். கூடுதல் பஸ்கள் மூலம் பார்க்கிங் இடத்தில் இருந்து நகர பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்படும்' என்றார். நிகழ்ச்சியில் சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி, எஸ்.பி., செல்வம், இன்ஸ்பெக்டர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.