/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வி.ஏ.ஓ., பணியிடத்திற்கு ரிசல்ட் வெளியீடு தேர்ச்சி பட்டியலில் 131 பேருக்கு இடம்
/
வி.ஏ.ஓ., பணியிடத்திற்கு ரிசல்ட் வெளியீடு தேர்ச்சி பட்டியலில் 131 பேருக்கு இடம்
வி.ஏ.ஓ., பணியிடத்திற்கு ரிசல்ட் வெளியீடு தேர்ச்சி பட்டியலில் 131 பேருக்கு இடம்
வி.ஏ.ஓ., பணியிடத்திற்கு ரிசல்ட் வெளியீடு தேர்ச்சி பட்டியலில் 131 பேருக்கு இடம்
ADDED : செப் 26, 2025 04:52 AM
புதுச்சேரி: வருவாய் துறையின் 41 வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கு ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சி பட்டியலில் மொத்தம் 131 பேர் இடம் பெற்றுள்ளனர்.
புதுச்சேரி அரசின் வருவாய் துறை 41 வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கு மொத்தம் 32,016 பேர் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 21ம் தேதி புதுச்சேரியில் 86 மையங்களில் நடந்தது. காலையில் நடந்த முதல் தாள் தேர்வினை 19,128 பேரும் இரண்டாம் தாளை 18,650 பேரும் எழுதினர்.
இவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து நேற்றிரவு ரிசல்ட் வெளியிடப்பட்டது. ஒரு வி.ஏ.ஓ., பணிக்கு 3 பேர் வீதம் மொத்தம் 131 பேர் தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
தகுதி மதிப்பெண் குறைவு தேர்ச்சி தகுதி மதிப்பெண் பொது பிரிவின ருக்கு - 30, எம்.பி.சி., ஓ.பி.சி., இடபுள்யூ.எஸ்., மீனவர், முஸ்லீம் - 25, எஸ்.சி., முன்னாள் ராணு வ வீரர் வாரிசுக்கு 20 மதிப்பெண் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
100 மதிப்பெண்ணிற்கான வி.ஏ.ஓ., கேள்வித்தாள் ஒரு விடை ஆட்சேபனை பெறப்பட்டது. அதனை ஆன்சர் கீ மறுபரிசீலனை குழுவும் ஏற்றுக்கொண்டது.
அதையடுத்து தேர்ச்சி தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. பொது பிரிவினர்-29.70, எம்.பி.சி., ஓ.பி.சி., இடபுள்யூ.எஸ்., மீனவர், முஸ்லீம்-24.75, எஸ்.சி., முன்னாள் ராணுவ வீரர் வாரிசுக்கு-19.80 ஆக குறைக்கப்பட்டு, வி.ஏ.ஓ., பணிக்கு ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்து கம்ப்யூட்டர் தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு அடுத்து கம்ப்யூட்டர் தேர்வு விரைவில் தலைமை செயலகத்தில் நடக்க உள்ளது.
இதில் 40 மதிபெண் எடுத்து அவர்கள் தேர்ச்சி பெற வேண்டும்.
எட்டு பேர் அவுட் வி.ஏ.ஓ., ரிசல்ட்டில் 8 பேரின் விடைத்தாள்கள் திருத்தப்படவில்லை. இவர்கள் சரிவர ரோல் நெம்பரை குறிப்பிடவில்லை. தங்களுடைய வினாத்தாள்களில் ஏ, பி, சி, டி., கேள்வி வரிசை சரியாகவும் குறிப்பிடவில்லை.
இதன் காரணமாக இவர்களது விடைத்தாள்கள் திருத்தத்திற்கு எடுத்து கொள்ளப்படாமல் நீக்கப்பட்டுள்ளதாக நிர்வாக சீர்திருத்த துறையின் தேர்வு பணியாளர் முகமை அறிவித்துள்ளது.