/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
135 தலைமை காவலர்கள் பணியிட மாற்றம்
/
135 தலைமை காவலர்கள் பணியிட மாற்றம்
ADDED : ஏப் 11, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; புதுச்சேரி போலீசில் பணியாற்றி வரும் 135 தலைமை காவலர்கள் நேற்று அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
புதுச்சேரி போலீஸ் துறையில் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீசார் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, புதுச்சேரி போலீசில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் பெண் தலைமை காவலர்கள் உள்ளிட்ட 135 தலைமை காவலர்கள் நேற்று அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம் கோஸ் வெளியிட்டுள்ளனர்.

