/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.சி.எஸ்., அதிகாரிகள் 14 பேர் அதிரடி மாற்றம்
/
பி.சி.எஸ்., அதிகாரிகள் 14 பேர் அதிரடி மாற்றம்
ADDED : டிச 09, 2025 05:42 AM
புதுச்சேரி: புதுச்சேரி 14 பி.சி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தலைமை செயலர் சரத் சவுகான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரியில் மொத்தமுள்ள 54 அரசு துறைகளை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், புதுச்சேரி குடிமை பணி அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் பல அதிகாரிகள் ஓய்வு பெற்றதால், பல பணியிடங்கள் பொறுப்பு அடிப்படையில் ஒருவரே 7 முதல் 9 துறைகளை கவனித்து வருவதால் கூடுதல் பணிச்சுமையால் பணிகள் தேக்கமடைந்துள்ளது. இதுகுறித்து நேற்றைய 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
அதனையொட்டி கவர்னர் உத்தரவின்பேரில் 14 பி.சி.எஸ்., அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புடன் பணியிடமாற்றம் செய்தும், புதுச்சேரி குடிமைப்பணி 2ம் நிலை அதிகாரிகள் 20 பேருக்கு தொடக்க நிலை அதிகாரியாக பதவி உயர்வு அளித்து பணியிடம் ஒதுக்கி தலைமை செயலர் சரத் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.
பணியிட மாற்ற விபரம்:

